ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்குக் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தி உள்ளார்.
தென்காசியின் வாசுதேவநல்லூரில் சோஹோ நிறுவனத்தின் கோவிந்தபேரி தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டுள்ள காய்கறி, பழங்கள், பயிறு வகைகள் மற்றும் பனை நார் மூலம் செய்து வைக்கப்பட்டிருந்த பொருட்களைக் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.
பின்னர் தொடர்ந்து சோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஶ்ரீதர் வேம்பு வழிகாட்டுதலுடன் கலைவாணி கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
மறைந்த அப்துல் கலாம், தன் பள்ளி பருவத்தில் வீடு வீடாகத் தினசரி நாளிதழ் போட்டுவிட்டு 24 கிலோமீட்டர் தூரம் சென்று படித்தார் என்றும், பின்நாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த நிலையைக் கல்வியின் மூலமாகத்தான் அடைந்தார் எனவும் அவர் கூறினார்.