வாட்ஸ்அப்பில் மொழிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.
சாட் செய்வதற்கும், படங்கள், பைல்களை அனுப்புவதற்கும் மிகவும் எளிமையாக இருப்பதால், வாட்ஸ்அப் எல்லா போன்களிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம்பெற்று இருக்கும் வாட்ஸ்அப், தற்போது அசத்தலான அப்டேட் ஒன்றை கொண்டு வந்து இருக்கிறது.
அதாவது, பயனர்கள் அனுப்பும் மெசேஜ் எந்த மொழியில் இருந்தாலும் அதை மொழிமாற்றம் செய்து தெரிந்த மொழியில் படிக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
முதல் கட்டமாக ஆங்கிலம், இந்தி, அரபிக், ஸ்பானிஷ் உள்ளிட்ட 19 மொழிகளில் இந்தச் சேவை கிடைக்க உள்ளது.