திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கோட் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பாரில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் அரசு விதிகளை மீறி டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையின் பாரில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் விபத்துகளும், பெண்களுக்கு அச்சுறுத்தலும் ஏற்படும் எனக் கூறியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.