ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையைத் துருக்கி ஏற்றுக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் துருக்கி அதிபர் எர்டோகன், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். 2019 ஆம் ஆண்டுக்குப் பின் சுமார் 6 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்பை, துருக்கி அதிபர் எர்டோகன் சந்தித்து பேசினார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு உலகளாவிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எர்டோகனை கடினமானவர் என்று பாராட்டிய டிரம்ப், மோசடி தேர்தல்களை பற்றி மற்றவர்களை விட நன்கு அறிந்தவர் எர்டோகன் என்றும் கூறினார்.
F-35 போர் விமானங்களை துருக்கிக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்பம் தெரிவித்த டிரம்ப், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை துருக்கி ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாகக் கூறினார்.