குஜராத் மாநிலம் சூரத்தில் புல்லட் ரயில் நிலையத்தின் முன்னேற்ற பணிகள் குறித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான சூரத் புல்லட் ரயில் நிலைய பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்த ரயில் நிலையம் 508 கிலோமீட்டர் தூர மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. புல்லட் ரயில் சோதனை நடவடிக்கைகள் 2026 இல் திட்டமிடப்பட்டு, 2029-க்குள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
இந்நிலையில் சூரத்தின் சரோலியில் அமைக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டார்.
















