காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை என தவெக வழக்கறிஞர் அறிவழகன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் பேட்டியளித்த அவர், “இந்த கோரமான சம்பவம் தவெக தலைவர் விஜயை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக துணை நிற்கும் என்றார்.
காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை என்றும், திருச்சி, அரியலூர், நாகை என எந்த இடத்திலும் விதிமுறைகளை மீறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.