கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கூட்டத்தை ஏற்பாடு செய்த தவெகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக, பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ். மணி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக
தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, கரூர் எஸ்.பி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் விஜய் மற்றும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.