கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது இயற்கையாக நடந்ததா, அல்லது செய்ற்கையாக உருவாக்கப்பட்டதா என நீதி விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கூட்டம் நடக்குதுனா இரண்டு பேருக்கும் பொறுப்பு, கூட்டம் நடத்துவர்களுக்கு, காவல்துறைக்கும், அரசாங்கத்திற்கும் உள்ளதாக தெரிவித்தார்.
எப்படி தவறு ஏற்பட்டது, அதன் பின்னனி பற்றி உள்த்துறை அமைச்சர் அமித்ஷா மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்த குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் விரைந்து குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என தெரிவித்தார்.
கூட்ட நெரிசலின் போட்டோ, வீடியோவை கைப்பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.