பற்களால் கயிறை கடித்தபடி 700 டன் எடையுள்ள கப்பலை இழுத்து எகிப்தை சேர்ந்த மல்யுத்த வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரர் அஷ்ரஃப் மக்ரூஸ், இவர் தனது பற்களால் லாரி, ரயில், கப்பல் உள்ளிட்டவை இழுத்து சாதனை படைப்பது வழக்கம்.
இந்நிலையில், மக்ரூஸ் கடந்த 2018-ம் ஆண்டில் 614 டன் கப்பலை இழுத்து சாதனை படைத்த நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் புதிய சவாலுக்குத் தயாரானார்.
அதன்படி எகிப்தின் செங்கடல் பகுதியில் உள்ள ஹுர்கடா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 700 டன் எடையுள்ள கப்பலை, கயிற்றின் உதவியுடன் தனது பற்களால் 15 மீட்டர் தூரத்திற்கு இழுத்து உலக சாதனை படைத்தார்.