சீனாவில் உலகிலேயே மிக உயரமான பாலம் போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குய்சோவ் (Guizhou) மாநிலத்தில் உலகிலேயே உயரமான Huajiang Grand Canyon பாலம் திறக்கப்பட்டுள்ளது. பீபான் நதிக்கு மேல் 625 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
1,420 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சூறாவளி காற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பாலம் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. Huajiang Grand Canyon பாலம் பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து 565 மீட்டர் உயரம் கொண்ட Beipanjiang பாலத்தின் சாதனையை முறியடித்துள்ளது.