காசா போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
அமைதி ஒப்பந்தம் இருதரப்பிலும் கையெழுத்தானதும், காசா போர் உடனடியாக முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டவுடன், காசாவில் இருந்து படிப்படியாக இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்படும் எனவும்,
காசாவில் ட்ரம்ப் தலைமையில் இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
காசாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தச் சர்வதேச படை நிலைநிறுத்தப்படும் எனவும், ஹமாஸ் அமைப்பினர் முழுமையாக ஆயுத போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் 20 அம்ச திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைதியை ஏற்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமெரிக்கா, காசாவை விட்டுப் பாலஸ்தீனியர்கள் வெளியேற வற்புறுத்தப்பட மாட்டார்கள் என விளக்கம் அளித்துள்ளது.