ஜிஎஸ்டி சீா்திருத்தம் அமலுக்கு வந்தபிறகு, அதன் பலனை விற்பனையாளா்கள் நுகா்வோருக்கு அளிக்காதது தொடா்பாக இதுவரை 3 ஆயிரம் புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரத்துறைச் செயலா் நிதி கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி சீா்திருத்தம் அமலுக்கு வந்தபிறகு, அதன் பலன் நுகா்வோருக்கு கிடைக்காதது தொடா்பாக ஒவ்வொரு நாளும் புகாா்கள் வந்துகொண்டிருப்பதாகக் கூறினார்.
தேசிய நுகா்வோா் உதவி எண்மூலம் இதுவரை 3 ஆயிரம் புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புகாா்கள் அனைத்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.