நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் திமுக நிர்வாகிகள் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை அழித்து வருவதாகப் பள்ளிபாளையம் நகராட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிபாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் கலந்து கொண்ட நிலையில், துணைத்தலைவர் மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
இருப்பினும் பெரும்பான்மை கவுன்சிலர்கள் பங்கேற்றதை தொடர்ந்து கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி கூட்டம் நடைபெற கூடாது என்பதற்காக அதிமுகவுடன் கைக்கோர்த்து சில திமுக கவுன்சிலர்கள் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் கட்சிக்குத் துரோகம் விளைவிக்கும் வகையில், எதிர்கட்சியினருடன் சேர்ந்து கொண்டு குமாரபாளையம் தொகுதியில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.