ஸ்விக்கி, ஜொமாட்டோ, பிளிங்கிட் மற்றும் ஜெப்டோ டெலிவரி முகவர்கள் இணைந்து கர்பா நடனமாடினர்.
நவராத்திரி, இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மக்கள் தாண்டியா மற்றும் கர்பா நடனங்களில் கலந்து கொள்ளும் வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாகப் பரரவி வருகின்றன.
அந்தவகையில், நவராத்திரி கொண்டாட்டத்தின் போது மக்கள் ஆடிப்பாடி நடனமாடினர். அவர்களுடன் இணைந்து ஸ்விக்கி, ஜொமாட்டோ, பிளிங்கிட் மற்றும் ஜெப்டோ டெலிவரி முகவர்களும் கர்பா நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
லட்சக்கணக்கான பார்வைகளை இந்தக் காணொலி பெற்றுள்ளது. இந்த நிலையில், தான் பார்த்ததிலேயே இது தான் சிறந்த நவராத்திரி வீடியோ எனவும் இணையவாசிகள் பலரும் ஏரளமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.