திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அரசால் வழங்கப்பட்ட வீடுகள் சிதிலமடைந்ததால் இருளர் இன மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
பொன்னூர் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி குடியிருப்பில் ஏராளமான இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குக் கடந்த 2020-ம் ஆண்டு பசுமை வீடு திட்டத்தின் கீழ், 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 51 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில், அந்த வீடுகள் சில ஆண்டுகளிலேயே மேற்கூரை சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து சிதிலமடைந்துள்ளன.
இதனால் இருளர் இன மக்கள் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.