நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காத்மாண்டுவில் உள்ள தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகளை வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது.
வாழும் கடவுளாகக் கருதப்படும் இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா பருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குமாரியாகத் தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதை சோதனை செய்வர்.
அதன்படி புதிய குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.