மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இ
முன்னதாக, காந்தி பிறந்த நாளையொட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், துணிச்சலும், எளிமையும் கொண்டு மாற்றத்திற்கான கருவியாக செயல்பட்டவர் காந்தி என புகழாரம் சூட்டியுள்ளார். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அத்தியாவசிய வழிமுறையாக சேவை மற்றும் ரக்கத்தின் சக்தியை காந்தி நம்பினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை தொடர்ந்து பின்பற்றுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 121-வது பிறந்த நாளையொட்டி டெல்லி விஜய்காட் பகுதியில் ள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.