சென்னை வடபழனி முருகன் கோயிலில் தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
நவராத்திரியின் 10ஆவது நாளில், மும்பெரும் தேவியர்களான துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை வதம் செய்து அதில் பெற்ற வெற்றியைத்தான் விஜயதசமி நாளாக கொண்டாடி வருகிறோம்.
கல்வி, தொழில், கலை நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு இன்றைய தினம் மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில், வடபழனி முருகன் கோயிலில் தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கல்வி சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி Media partner ஆக இணைந்து செயல்பட்டது.
வித்யாரம்பம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐஐடி இயக்குனர் காமகோடி, குழந்தைகளின் கல்வியில் முதல் அடி வைப்பதற்காக வித்யாரம்பம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இதில் பங்கேற்று குழந்தைகள் அனைவரும் ஐஐடியில் சேர வேண்டும் என கடவுளை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.