அரியலூர் கோதண்ட ராமசாமி கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அரியலூர் நகரில் உள்ள கோதண்ட ராமசாமி கோயிலில் 83 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தேரோட்ட திருவிழா தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சீனிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேளதாளம், நடன குதிரைகள் ஊர்வலத்துடன் பூதேவி, ஸ்ரீதேவியுடன் சீனிவாச பெருமாள் திருத்தேரில் எழுந்தருளிய நிலையில், அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, எம்எல்ஏ சின்னப்பா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா முழுக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்திற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.