தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
குலசேரகன்பட்டினத்தில் தசரா விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இரவு 12 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது.
இதனைக்காண தமிழகம் மட்டுமில்லாமல், ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருதைதந்திருந்தனர். குலசை கடற்கரை பகுதியில் குவிந்திருந்த பக்தர்கள், சூரசம்ஹாரம் நிகழ்வில் முத்தாரம்மன், மகிஷா சூரனை வதம் செய்வதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.