மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
நிலநடுக்கத்தின் அட்சரேகை 24 புள்ளி 70 ஆகவும், நீளம் 94 புள்ளி 89 ஆகவும், இதன் ஆழம் 90 கிலோ மீட்டரிலும் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3 புள்ளி 3 ஆகப் பதிவானது.
அதற்கு முன்னதாக ரிக்டர் அளவில் 3 புள்ளி 6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 97 புள்ளி 61 நீளத்திலும், 60 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டது. மிதமான நிலநடுக்கம் ஆழமாக ஏற்படும் நிலநடுக்கத்தைவிட ஆபத்தானவை.
ஏனெனில் ஆழமற்ற நில அதிர்வுகளிலிருந்து ஏற்படும் அதிர்வலைகள் மேற்பரப்புக்குப் பயணிக்கக் குறுகிய தூரத்தைக் கொண்டுள்ளன.
இதன் விளைவாக வலுவான நில அதிர்வு மற்றும் கட்டமைப்புகளுக்கு அதிகளவில் சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.