மடகாஸ்கரில் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா பதவி விலகக் கோரி நடைபெற்ற ஜென் ஷி போராட்டத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
மடகாஸ்கரில் கடும் தண்ணீர் பஞ்சம் மற்றும் மின்சார பற்றாக்குறை நிலவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்தும் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா பதவி விலகக் கோரியும் ஜென் ஷி என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டகாரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் மடகாஸ்கரில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.