பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய சக்தி வாய்ந்த புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடக்கு பிலிப்பைன்ஸின் இசபெலா மாகாணத்தில் டினாபிகுவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசியது.
இதையடுத்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய கிராமங்களில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். மாட்மோ எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல், தென் சீனக் கடலை அடைந்து தெற்கு சீனாவை நோக்கி நகரும் என்று பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டு 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் புயல் வீசி வருவதால் பிலிப்பைன்ஸ் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.