சென்னை மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான கண்டெய்னர் பெட்டிகள், சுங்க அதிகாரிகளின் சோதனைக்குப் பின் வெளியே அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கண்டெய்னர் பெட்டிகளை தூக்கும் ராட்சத இயந்திரம் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்த மணலி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.