சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வி.கே.சசிகலாவின் வீட்டை 6 மாதமாக உளவு பார்த்து வரும் நபரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவுக்கு மிகப் பிரமாண்டமான வீடு உள்ள நிலையில், கடந்த 6 மாதமாகப் போலீஸ் எனக்கூறி நபர் ஒருவர் உளவு பார்த்து வந்துள்ளார்.
இதில், சந்தேகமடைந்த சசிகலாவின் உறவினர்கள், அவரை பிடித்து விசாரித்துச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். மேலும், நபர் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.