கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
44 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நீர்மட்டம் 41 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வந்து கொண்டிருக்கும் 1124 கனஅடி உபரிநீர் முழுவதுமாகத் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.