அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் சீக்கிய வீரர்கள், தாடி வளர்க்க இருந்த சலுகையை நீக்கும் வகையில் அறிவிப்பு வெளியானதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராணுவ வீரர்கள் தாடி வைப்பதை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இது சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் தாடி வளர்க்கும் வகையில் இருந்த சலுகைகளை நீக்குவதாக அமைந்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு துறையின் இந்த நடவடிக்கைக்குச் சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மத சுதந்திரம் மற்றும் அடையாளத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் மதம் அல்லது ராணுவப் பணி இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம்குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், தாடி வைத்த பணியாளர்களைக் கரடிகள் மற்றும் கொழுத்த ஜெனரல்கள் எனக் குறிப்பிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.