தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கொலை செய்யப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடலை வாங்க மறுத்துச் சக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் பிரசாத் யாதவ், உடன்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்காததால் அர்ஜூன் பிரசாத் யாதவை அடித்துக் கொலை செய்து உடலை எரித்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி உடலை வாங்க மறுத்துச் சக தொழிலாளர்கள் அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.