வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆன்லைனில் பணத்தைப் பெற உதவும் ஒருங்கிணைந்த கட்டண தீர்வாக Zoho Payments- ஐ அறிமுகமாகிறது. இதன் மூலம் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்ரீதர் வேம்புவின் Zoho நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நிதி சேவைகள் துறையில் கால் பதித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சுயசார்பு இந்தியா என்ற பிரதமர் மோடியின் குறிக்கோளுக்கு ஏற்ப ZOHO நிறுவனம், தொழில் நுட்ப துறையில் இந்தியாவில் உருவாக்குவோம்; உலக அளவில் விற்பனை செய்வோம் என்று பணியாற்றி வருகிறது.
இந்தியர்கள் அனைவரும் சுதேசி பொருட்களையே வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்களையே மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்கு மாற்றாக, தொழில் நுட்பச் சேவைகளை வழங்கி வரும் ZOHO நிறுவனத்தின் மென்பொருட்களையே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக வாட்ஸ் அப் க்கு மாற்றாக ZOHO வின் அரட்டை செயலியைப் பதிவிறக்கத்தில் சாதனை படைத்து வருகிறது. 2018-19-ல் 3,134 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகளின் அளவு 2023-ல் 11,660 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய B2B கட்டணச் சந்தை 11 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கட்டண ஒருங்கிணைப்பாளராக Zoho அங்கீகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, Zoho தனது புதிய Zoho Payments POS சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஜோஹோ பேமெண்ட்ஸ் POS சாதனங்களை வெளியிடுவதன் மூலம் ஃபின்டெக் துறையில் நுழைகிறோம் என்றும், இதன் மூலம் வணிகங்கள் தங்கள் பரந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் தடையின்றி இணைந்திருக்கும் என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, நேரில் பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜோஹோவில் வணிக நிதி, வங்கி மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று உறுதியாக நம்புவதாகவும், முன்னணி வங்கிகளுடன் ஒருங்கிணைந்து, நிதி பயன்பாடுகளில் ‘இணைக்கப்பட்ட வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜோஹோவின் நிதி மற்றும் செயல்பாட்டுத் துறையின் உலகளாவிய தலைவர் சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜோஹோ பேமெண்ட்ஸ் பிரிவின் கீழ், நேரில் பணம் செலுத்தும் சாதனங்களான point-of-sale PoS, QR குறியீடு சாதனங்கள் மற்றும் Soundbox ஆகியவற்றை ZOHO அறிமுகப்படுத்தியுள்ளது. ஜோஹோவின் ஒவ்வொரு POS சாதனத்தில் விரைவான பில்லிங், உள்ளமைக்கப்பட்ட பில்லிங் மற்றும் கட்டண பயன்பாடுகள் மற்றும் EMV கார்டுகள், UPI QR மற்றும் காண்டாக்ட்லெஸ் கட்டணங்களுக்கான ஆதரவுக்கான தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 4G, Wi-Fi மற்றும் புளூடூத் மூலம் இணைப்புடன் உள்ளமைக்கப்பட்ட ரசீது பிரிண்டரும் அமைக்கப்பட்டுள்ளது. Zoho Payments UPI, 35-க்கும் மேற்பட்ட நெட் பேங்கிங் விருப்பங்கள் மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதைப் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ள வணிகங்களுக்கு உதவுகிறது. இது மோசடி தவிர்ப்பு, பரிவர்த்தனை நுண்ணறிவு, பணத்தைத் திரும்பப் பெறுதல், பணம் செலுத்துவதில் தோல்விகளை கையாளுதல் மற்றும் தகராறுகளைத் திறமையாக நிர்வகித்தல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
மேலும், பில்லிங் மற்றும் இன்வாய்ஸ்கள் உள்ள இந்த Zoho Payments, வணிகங்கள் கட்டணத் தீர்வோடு இணைக்கப்பட்டு, தனித்தனி மூன்றாம் தரப்புக் கணக்குகளை அமைக்கவோ அல்லது பிற கட்டண நுழைவாயில்களுடன் ஒருங்கிணைக்கவோ தேவை இல்லாமல், ஆன்லைன் பேமெண்ட்டுகளை விரைவாக ஏற்பதற்கு ஏற்றதாக உள்ளது.
Zoho Books , Zoho Billing மற்றும் Zoho Invoice, Zoho Checkout மற்றும் Zoho Commerce ஆகியவற்றுடனும் Zoho Payments ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஜோஹோ புக்ஸ் மூலம் உருவாக்கப்படும் இன்வாய்ஸ்களை வாங்குபவரின் கணக்கியல் அமைப்பில் தானாகவே பதிவு செய்யலாம், இது சமரச செயல்முறையை நெறிப்படுத்துகிறது மற்றும் கைமுறை தலையீட்டைக் குறைக்கிறது.
கூடுதலாக, வணிகங்கள் TReDS தளம்மூலம் செலுத்தப்படாத இன்வாய்ஸ்களுக்கான நிதியுதவியை அணுகலாம், இது பணப்புழக்க நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துகிறது. முன்னதாக வசூல், தானியங்கி சம்பள விநியோகம், விற்பனையாளர் கொடுப்பனவுகள் மற்றும் நிதி கண்காணிப்பை எளிதாக்கும் மெய்நிகர் கணக்குகளையும் (Virtual Accounts) ஜோஹோ இந்தச் சாதனங்களுடன் இணைத்துள்ளது.
இது, பாரத் பில்பே நிறுவனத்திலிருந்து பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலம் இயங்கும் இன்வாய்ஸ் மேலாண்மை மற்றும் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் B2B கட்டண அம்சங்களைக் கொண்டுள்ளது. எனினும், Zoho pay தற்போது அதன் அரட்டை செயலியில் இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை.
அதற்கான வேலைகள் விரைவாக நடைபெற்றுவருவதாக ZOHO நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். Zoho Payments மூலம், நிதி தொழில்நுட்பத் துறையிலும் தனது நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி உள்ளது ZOHO. ஸ்ரீதர் வேம்புவின் இந்த முயற்சி வணிகங்களுக்கான ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் (BBPS) மூலம் B2B கட்டணங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
















