விமானத்தில் பயணித்த முதியவர், அசைவு உணவு உண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கிச் சென்ற விமானத்தில் கலிபோர்னியாவை சேர்ந்த 85 வயதான ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜெயவீரா பயணம் செய்தார்.
அப்போது அவர் தனக்கு சைவ உணவுதான் வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால் சைவ உணவு இல்லை எனவும் அசைவ உணவில் உள்ள இறைச்சியை தவிர்த்துவிட்டு மற்றவற்றை மட்டும் சாப்பிடுமாறும் பணிப்பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து இறைச்சியை தவிர்த்துவிட்டு சாப்பிட முயன்ற ஜெயவீராவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.
உடனடியாக ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் விமானம் தரையிறங்கியது. அங்கு ஜெயவீராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அசைவ உணவு நுரையீரலுக்கு சென்றதால் ஆஸ்பிரேஷன் நிமோனியா ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் மூலம் இந்தச் சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கேட்ட உணவை வழங்காத கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், ஒரு லட்சத்து 28 ஆயிரம் டாலர் இழப்பீடு வழங்கக் கோரி ஜெயவீராவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.