15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த டென்மார்க் அரசுத் தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளைச் சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.