சென்னையில் நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மானின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான ஆவணங்கள், லேப்டாப்,பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகின.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் கேரளாவில் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.