ஆப்கானிஸ்தானுக்கு சென்ற சுற்றுலா பயணி, இந்தியர் என்று அறிந்ததும் தலிபான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் வியக்க வைத்துல்லது.
இந்தியாவை சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்றார். இந்நிலையில், எல்லையில் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காகத் தலிபான் வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, தான் ஒரு இந்தியர் என்று அவர் குறிப்பிட்டதும் வீரர்கள் புன்சிரிப்புடன் வரவேற்று பாஸ்போர்ட்டைச் சரிபார்க்காமலேயே செல்ல அனுமதித்தனர்.
இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சகோதரர்கள் என வீரர்கள் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், எதிர்பாராத இடங்களில்கூட மரியாதையும் நட்பும் ஒளிர்வதாகவும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பிணைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது எனவும் கூறியுள்ளனர்.