கர்நாடகாவில் கங்கம்மா தேவி சிலையை மிதித்து இஸ்லாமிய பெண்கள் அவமதித்ததாகப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு அடுத்த சிக்கபல்லப்பூர் பகுதியில் ஸ்ரீனிவாச சாகர் அணை உள்ளது. அணை நிரம்பி வெளியேறும் நீரில் சுற்றுலா பயணிகள் குளிப்பது வழக்கம்.
இந்நிலையில், நீரில் விளையாடிக் கொண்டிருந்த பெண்கள் சிலர், அணையின் சுவரில் சாய்ந்தபடி அருகில் இருந்த கங்கம்மா தேவி சிலை மீது காலை வைத்திருந்தனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் சிக்கபல்லப்பூர் காவல்நிலைய போலீசார், மத நம்பிக்கைகளை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.