சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் நடுத்தர மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில் நேற்று, காலை மற்றும் பிற்பகல் என இருமுறை மொத்தம் ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 91 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர வரக்கத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.