தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான ஓய்வூதியம் மாதத்திற்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு PF ஓய்வூதிய தொகை மாதம் ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்த ஓய்வூதிய தொகை உயர்த்தப்படாமலேயே இருந்து வருகிறது.
இது தொடர்பாக நாளையும் நாளை மறுநாளும் பெங்களூருவில் ஆலோசனை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.