ஒன்றுமே செய்யாததற்காக ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசாவில் அமைதியை நிலைநாட்டியதாகவும், 8 போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததாகவும் கூறி தனது சாதனையைப் புகழ்ந்தார்.
ஒபாமா முதல் பதவிக்காலத்தில் சில மாதங்கள் இருந்தபோது நோபல் பரிசை வென்றதாக குற்றம்சாட்டினார். ஒன்றுமே செய்யாததற்காக ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது என்றும், அவர் எதையும் சாதிக்கவில்லை எனவும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். மேலும், அமெரிக்காவை அழித்ததற்காக ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதாகவும் டிரம்ப் விமர்சித்தார்.