காஸாவில் சுமார் 55,000 சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
காஸாவில் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போரை நிறுத்தத் தற்காலிகமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஸா பகுதியில் சிறுவர்களின் பட்டினி குறித்து ஐ.நா புதிய ஆய்வு நடத்தியது.
அதில், காஸாவில் 6 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களில் 16 சதவீதம் பேர் உயிருக்கு ஆபத்தான கடும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா சுகாதாரத்துறையின் தரவுகளின்படி, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 461 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதில் 157 பேர் சிறுவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.