பீகார் சட்டமன்ற முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ம் தேதியும், இரண்டாம் கட்டம் 11ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அக்டோபர் 17ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பீகாரில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளில் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு என அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.