காசா போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்குச் சென்ற டிரம்ப்பிற்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து நாடாளுமன்றத்திற்குச் சென்ற டிரம்ப் வருகை குறிப்பில் கையெழுத்திட்டார்.
பின்னர் உரையாற்றுவதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு டிரம்ப் சென்றார். அப்போது அவருக்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.