லண்டனில் தன்னை தாக்கியவர்களிடம் இருந்து துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய தன் மனைவி பெண் சிங்கம் எனத் தொழிலதிபர் வினோத் சேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியும், மலேசிய கோடீஸ்வரரும், Petra Group நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான வினோத் சேகர், கடந்த வாரம் லண்டன் சென்றார்.
தொடர்ந்து அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மகள் தாராவை பார்க்க வினோத் சேகர் தனது மனைவியுடன் காரில் சென்றுள்ளார்.
தொடர்ந்து காரிலிருந்து வெளியேறிய வினோத் சேகரை, அங்கு வந்த மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். தன் கணவர் தாக்கப்படுவதை கண்ட வினோத் சேகரின் மனைவி Winy Yeap, உடனடியாகக் காரிலிருந்து இறங்கி மர்ம நபர்கள் மீது தனது கைப்பையால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் குறித்தும், லண்டன் தெருக்களின் அபாயம் குறித்தும் வினோத் சேகர் வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சற்றும் யோசிக்காமல், தன்னைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய தன் மனைவியை பெண் சிங்கம் என்றும் வினோத் சேகர் கூறியுள்ளார்.