தேனி மாவட்டம் கம்பம் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் உடலை உடற்கூறு ஆய்விற்காகச் சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த முருகன், கடந்த 2023 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாகக் கூறி அவரின் மனைவி கவிதா, உறவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முருகனின் உடலை சாமாண்டிபுரத்தில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், முருகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் தந்தைப் போலீசில் புகார் அளித்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் போலீசார் மற்றும் மருத்துவர்கள் சுடுகாட்டில் இருந்து முருகனின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.