வடகிழக்கு பருவமழை நாளைத் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், நாளைக் கோவை, நீலகிரி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைப் பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைப் பெய்து வருகிறது.