இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.6 சதவிகிதமாக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவிகிதமாகக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 6.6 சதவிகிதமாக உயர்த்தி சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதமாக உயர்த்தி உலக வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.