இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.
கடந்த ஜுலை 28ஆம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், 4 மீனவர்களும் மன்னார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 4 மாத சிறைவாசத்திற்கு பிறகு கடந்த 4ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த 4 மீனவர்களையும் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்று, உணவு மற்றும் உடைகளை வழங்கினர்.
பின்னர், அரசு செலவில் கார் மூலம் 4 மீனவர்களும் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.