மத்திய பிரதேசத்தில் BSF விமானத்தை ஹோட்டலாக மாற்றி வரும் வியாபாரியின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
உஜ்ஜயினியைச் சேர்ந்தவர் ஸ்கிராப் வியாபாரி வீரேந்திர குஷ்வாஹா. இவர் 55 இருக்கைகள் கொண்ட பழையை BSF விமானத்தை 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.
இந்த விமானம் 18 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படையில் இயக்கப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
டெல்லியில் ஏலம் விடப்பட்ட விமானத்தை வாங்கிய குல்வாஹா, அதனை உஜ்ஜையினிக்கு கொண்டு வர ஐந்தரை லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளார்.
இந்நிலையில், விமானத்தை 4 முதல் 5 அறைகள் கொண்ட ஹோட்டலாக மாற்றும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
உஜ்ஜையினுக்கு வரும் பக்தர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுப்பதற்காக விமானத்தை ஹோட்டலாக மாற்றும் வீரேந்திர குஷ்வாஹாவின் முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.