உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதன் உள்ளடக்கம் குறித்து அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப் தொடர்ந்து உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை எந்த மாதிரியான முன்னேற்றத்தை கொண்டு வரும் என்பது விரைவில் தெரியவரும்.
உக்ரைன் போர் நான்காவது ஆண்டில் நுழையும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை புதிய முடிவுகளை கொண்டு வரக்கூடும் என உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.