கென்யாவில் முன்னாள் பிரதமர் ஒடிங்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கென்யாவின் முன்னாள் பிரதமர் ஒடிங்கா மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் மிகப்பெரிய மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முற்பட்ட போது இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.