சீனாவில் கென்ஸ் எனும் ஆண் துணைகளை பெண்கள் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளும் கலாச்சாரம் தொடர்பான காணொலி வைரலாகி வருகிறது.
சீனாவில் கென்ஸ் எனும் புதிய கலாசாரம் பெண்கள் மத்தியில் வேகமெடுத்து வருகிறது. அங்குள்ள வசதிபடைத்த மற்றும் மேல் நடுத்தர பெண்கள், வழக்கமான குடும்ப உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காகக் கென்ஸ் என அழைக்கப்படும் ஆண்களை வாடகைக்கு அமர்த்தும் முறையை விரும்புகின்றனர்.
இந்நிலையில், கென்ஸ் என்றால் என்ன? என்ற தலைப்பில் வெளியான காணொளி வைரலாகி வருகிறது. அதில், கென் என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் போன்றவர் எனக் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்வதுடன், ஒரு கணவரை போலவே உறுதுணையாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலை இளைய தலைமுறையினர் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலில் ஆர்வத்தை ஏற்படுத்த அரசுகள் அதிக சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதனிடையே புதியதாகப் பரவி வரும் கென்ஸ் கலாச்சாரம் அந்நாடுகளின் ஆட்சியாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.