திண்டுக்கலில் கேதார கௌரி விரதம் கடைபிடித்த பெண்கள், கோயில்களில் சிறப்புப் பூஜை செய்தனர்.
சிவபெருமான் – பார்வதி தேவியின் அருளைப் பெறுவதற்காக அமாவாசை தினத்தில் பெண்கள் கேதார கெளரி விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில், விரதம் இருந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
21 அதிரசம், மஞ்சள், அச்சு வெல்லம், தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்துச் சாமி தரிசனம் செய்தனர்
தாலி பாக்கியம் நிலைத்து நிற்பதற்கும், குடும்பங்களில் உள்ள பிரச்னைகள் தீர்வதற்கும் இந்தப் பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.